Saturday 14 September 2013

நல்ல சினிமாட்டோகிராபர் ஆவது எப்படி?


காட்சியமைப்பு சிந்தனை, நல்ல நுட்பம், நெருக்கடியான தருண த்தில் நிதானம் இழக்காமல் இருத்தல், பிரச்சினைத் தீர்க்கும் திறன் போன்ற குணங்கள், ஒரு சினிமாட்டோ கிராபர் அல்லது போட்டோகிராபி இயக்குநருக் கான தகுதிகள்.
ஆரம்ப நாட்களில், இந்த போட் டோகிராபி தொழில் துறையான து, ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டர், அந்த ப் படத்தின் டைரக்டராகவும் இருப்பார். ஆனால், இன்றைக்கு, போட்டோகிராபி டைரக்டர் அல்லது சினிமாட்டோகிராபர் (cinematographer) என்பவரின் பணி, மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத் தன்மை வாய்ந்த தாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட் டோகிராபி இயக்குநர், ஒரு படத்திற்கான சிறந்த சொத்தாக மதிக்கப்படுகி றார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்க ளையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.
ஒரு சினிமாட்டோகிராபராக ஆவத ற்கு, டெக்னிக்கை விட, கலைநயம் அதிகம் தேவை என்றாலும், அதிகள விலான டெக்னிக்குகளையும் உள் வாங்க வேண்டியுள்ளது மற்றும் அதிகமான விஷயங்களை கற்று தெரிந்துகொள்ள வேண்டியு ள்ளது.
கலைநயத்தைக் கற்றல்
ஒரு நல்ல சினிமாட்டோகிராபராக நீங்கள் உருவாக, படிப்பை விட, உங்களின் ஆசிரியரே, முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமா ட்டோகிராபி தொடர்பான சிறப்பு படிப்பில் சேர, ஒருவர், திரைப்படக் கல்லூரியில் சேர வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரை, இப்படிப்பு, 2 முதல் 3 வருட டிப்ள மோ படிப்பாக வழங்கப்படுகிறது.
புனேவிலுள்ள, பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத் தாவிலுள்ள சத்யஜித்ரே பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்றவை புகழ்பெற்ற திரைப்பட கல்லூரிகள். இங்கே வழங்கப்படும், முது நிலை டிப்ளமோ படிப்பு புகழ் பெற்றது. இவைத்தவிர, விஸ்லிங் உட்ஸ் (Whistling Woods) போன்ற திரைப்பட கல்வி நிறுவனங்களில், பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, 2 வருட படிப்பை மேற் கொள்ளலாம்.
நீங்கள் யாராக இருக்க வேண்டும்?
திரைப்படக் கல்லூரிகளில், பயிற்சி என்பது, தியரி மற்றும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். ஒருவர், போட்டோகிராபி இயக்குநராக அல்லது சினிமாட்டோ கிராபராக பயிற்சி எடுக்கிறார் எனில், அவர் முதலில் அதுவாகவே இருக்க வேண்டும். அப்போதுதான், வெற்றி கரமாக கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிக்கு வெளியே, நீங்கள் தனி யாக பல ப்ராஜெக்ட்களை செய்ய வேண்டியிருக்கும். படிப்பா னது, கேமாராக்களை வைத்து, செயல் முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.
பாடத்திட்ட அமைப்பு
முதல் வருட படிப்பானது, பொது அடிப்படை படிப்பாக இருக்கும். டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட, சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஒரு நாளின் முதல் பாதி, தியரி பாடங்களுக்கு ஒதுக்கப் படும். மீதி பாதி நாள், அனைத்து பாடங்களின் பிராக்டிகல் பயிற்சிக்காக ஒதுக்கப் படும். மாலைப் பொழுதானது, படத்தை திரையிடுத லோடு முடியும். உலகின் அனைத்து வகை யான சினிமாக் களையும் மாணவர்கள் பார்த்து ரசிப்பார்கள். உண்மையிலேயே, இது ஒரு சிறந்த அனுபவம்.
இரண்டாம் ஆண்டு படிப்பில், நடைமுறை பயிற்சிக்கே, மிக அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, நீங்கள் அதிகநேரம் ஸ்டூடியோவில் செலவிட வேண்டியிருக்கும். ஒவ் வொருவருக்கும் ஸ்டூடியோ நேரம் ஒதுக்கப்பட்டு, சக மாணவர்க ளுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு பயிற்சியில், ஒரு சீனியர் மாணவர், போட்டோகிராபி இயக்குநராக இருந்தால், அவரது சக மாணவர்கள் அல்லது ஜுனியர்கள், அவருக்கு உதவியாள ர்களாக இருப்பார்கள்.
இறுதியாண்டு முடிவில், ஒரு மாணவ ர், 6 படங்கள் வரை தயாரித்தி ருப்பார். அதில், குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமெ ண்டரி, இறுதி அரைமணிநேர டிப்ளமோ படம் போன்றவை அடங்கும். படிப்பு முடிகையில், ஒரு மாணவர், முழுதகுதி பெற்ற ஒரு போட் டோகிராபி இயக்குநராக இருப்பார். ஒரு வரின் விடா முயற்சி யுடன் கூடிய கடின உழைப்பே, இந்த நிலையை அடைய உதவும்.
பயிற்சியின் தன்மை
பயிற்சியின்போது, மாணவர்கள், குழுவாக பயிற்சிபெற வைக்கப்படுகி றார்கள். குழுவாக பணியாற்றும் ஒருவர் சிறந்த அனுபவத்தைப் பெறு கிறார். இது போன்ற பயிற்சியில், ஒருவரின் சுய சாதனையை விட, ஒரு குழுவின் சாதனையே பெரிதாக தோன்றும். ஒவ்வொருவ ரின் தனித் திறமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதன்மூலமாக, சக மனிதர்களின் மகத்துவமும் தெரியவரும்.
கருத்தை மேம்படுத்தல்
ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு, திரைப்படக் கல்லூரிகளில் வளர்த் தெடுக்கப்ப  டுகிறது. உங்களுக்கும், உங்களது ஆசிரியருக்கும், சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கள் இருக்கலாம். ஆனால், தனி மனிதன் என்ற முறையில், உங்களின் சுதந்திரத்தி ற்கு மதிப்பு உண்டு.
வகுப்பறைக்கு வெளியே…
திரைப்படக் கல்லூரி படிப்பில், வகுப்பறையின் பணி என்பது, சிறிதள வேயாகும். உங்களின் உள்ளார்ந்த ஆர்வமும், திரைப்படங்களை தேடித்தேடி பார்ப்பதும், விமர்சிப்ப தும், விவா திப்பதும், பல்வேறான அம்சங்க ளை ஆராய்வதும், கலையோடு சேர்த்து, தொழில் நுட்ப அம்சங்க ளையும் தெரிந்து கொள்வதும் உள்ளிட்ட பல்வேறு விஷய ங்கள் அடங்கியுள்ளன.
திரைப்படம் பற்றி சக மாணவர்களுடன் விவாதம் செய்வது, உங்களின் கலையுலக அறிவை கூர்மையடைய செய்யும். ஏனெனில், பலவி தமான பின்னணிகள் மற்றும் ரசனைக ளைக் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள். எந்த மாதிரியான சினிமாவுக்கு, அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். ஒருவரின் உள்ளார்ந்த திறன், பிறருடன் விவாதிக்கும்போது சிறப்படை யும் என்பதை மறக்கக் கூடாது.
திரைப்படக் கல்லூரிகளுக்கு அப்பால்…
போட்டோகிராபி துறையில் பயிற்சிபெற, திரைப்படக் கல்லூ ரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களைக் கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த போட்டோகிராபி இயக்குநர்களை உருவாக்கும்.
மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு, கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம், செய்தி அல்லது டாகு மென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடை க்கிறது. கேமரா குறித்த சிறப்பம்சங்கள், மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் இல்லை யென்றாலும், பல வெற்றிகரமான போட்டோகிராபி இயக்குநர் களை அப்படிப்பு உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
திரைப்படக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற சிறந்த நபர்களை ஆசிரியர்க ளாகக் கொண்டு, பல சான்றிதழ் படிப்புகள் வழங்க ப்படுகின்றன. இந்தப் படிப்புக ளில், திரைப்படக் கல்லூரி களில் பின்பற்றப்படும் பாடத் திட்டங் களின் சிறியளவு மாடல்கள் பின்ப ற்றப்படுகின்றன. எனவே, ஒருவர் சிறப்பான கல்வியைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. அதே சமயம், எந்தளவு நல்ல ஆசிரியர்கள் அமைகிறார்களோ, அந்தளவு தான் உங்க ளின் கற்றல் அமையும். எனவே, நல்ல ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியம். எனவே, இப்படிப்பிற்கென, ஏதேனும் கல்வி நிறுவனத்தில் விண்ண  ப்பிக்கும் முன்பாக, அங்கே படிக்கும் அல்லது படித்த மாணவ ர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
பணியில் கற்றுக்கொள்ளுதல்
போட்டோகிராபி தொழில் என்பது, பல சிறந்த அனுபவங்களைக் கொடுக்கும் ஒரு தளமாகும். நீங்கள், ஒரு திரைப்படக் கல்லூரி யில் படித்து முடித்து வெளிவந்தவுடன், தனியான முறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சில தடவைகளுக்கு, பிறரின் உதவி தேவைப்படும். நீங்கள் ஒரு சிறந்த, புகழ்பெற்ற கல்வி நிறுவ னத்தில் படித்தவராக இருந்தால், அங்கேயே உங்களுக்கு குழுப் பணியின் அனுபவம் கிடைத்திருக் கும். அந்த அனுபவம், உங்களது தொழிலிலும் உதவிகரமாக இருக்கும்.
உதவியாளர் பணி
கல்வி நிறுவனத்தில் ஷ¤ட்டிங் நடைபெறுகையில், உங்களின் பணி, நெருக்கடியின்றி இருக்கும். சில குழுக்கள், ஒரு ராணுவ கட்டுக்கோப்புடன் இயங்கும். எனவே, சில காலம் கழிந்த பிறகு தான், உங்களுக்கு உதவியாளர் தொடர்பான பயிற்சி கிடைக்கும். ஒரு அம்சத்தை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும் என்ப தை தெளிவாக முடிவுசெய்து, அதன்படியே செயலை மேற் கொள்வதில், உதவியாளர்களின் பங்கு மற்றும் அவர்களை வழிநடத்தும் திறன் போன்றவை முக்கிய மானவை.
பணி வாய்ப்புகள்
திரைப்படக்கல்லூரிகளில், ஓரியன்டேஷன் என்பது, பிரதான அளவில், பிக்ஷனாக இருந்தாலும், அதில் படித்து வெளிவரும் பல சினிமாட்டோ கிராபர்கள், டாகு மெண்டரிகளில் பணி புரிந்து, திருப்தி யான பணி அனுபவம் மற்றும் சம்பளத்தைப் பெறுகிறார்கள். பிக்ஷ னில் பணியைத் தேடும் ஒருவர், சில டாகுமென்டரிகளை எடுக்கிறார். இந்த அனுபவம் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த வகையில், ஒருவர், அதிக பணம் சம்பாதிக்கலாம்.
படித்து முடித்ததும், விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில், சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ் பெற்ற சினிமாட்டோ கிராப ர்கள், ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நிகராக மதிக்கப்படு கிறார்கள். ஆனால், இத் துறையில் வெற்றியடைய கடின முயற்சியும், ஆரம்பகால சிக்கல்களை சமாளிக்கும் திறனும் தேவை. அதை முடித்துவிட்டால், ஒளிமயமான எதிர்காலம் உங்களு க்காக காத்திருக்கும்.

No comments:

Post a Comment