Saturday 14 September 2013

நல்ல அனுபவம், அதிக வருமானம் – பேஷன் ஜர்னலிசம்


பேஷன் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி, இன்றைய நிலையில், செய்தித்தாள்கள், இதரப் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகி யவற்றில் அதிகளவில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
இந்த புதிய சூழ்நிலையானது, பேஷன் ஜர் னலிசம் என்ற ஒரு புதிய துறை உருவாக காரணமாக அமைந்துள்ளது. பேஷன் பற் றி பெரியளவில் ரிப்போர்ட் செய்வது மற்று ம் எழுதுவது பேஷன் ஜர்னலிசம் எனப்ப டும்.
பேஷன் ஜர்னலிஸ்ட் என்பவர்கள், பேஷன் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழு துதல், எடிட் செய்தல் மற்றும் ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். இத்துறையில் சிறந்து விளங்க, கவர்ச்சி மற் றும் பேஷன் தொடர்பான நல்ல அறிவைக் கொண்டிருக்க வேண் டும். மேலும், தற்போது, தேசிய மற்றும் சர்வ தேச அளவில் பெரியளவில் பேஷன் தொழில்துறை வளர்ந்துவருவதால், அதைப்பற்றிய பரந்த மற்றும் விரிவான புரிதல் அவசியமாகிறது.
பேஷன் ஜர்னலிச பணியின் தன்மைக ள்
பேஷன் நிகழ்ச்சிகள் தொடர்பான செய் திகளை சேகரித்தல், லைப் ஸ்டைல் மற்றும் பேஷன் டிரண்டுகள் தொடர்பா க எழுதுதல் ஆகியவற்றை உள்ளடக் கியது இந்தப் பணியாகும். ஒப்பனை (make-up) செய்தல், ஆடைகள் மற்றும் பலவிதமான பாவனைகள் குறித்து பேஷன் ஜர்னலிஸ்ட் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இத்துறையைப் பற்றி தெரிந்த ஒருவர், வெறும் பேஷன் ஜர்னலிஸ்ட் என்ற நிலையில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளத் தேவையில் லை. வேறுபல பணி வாய்ப்புகளும் உள்ளன. பேஷன் விமர்சகர், தொலைக்காட்சிகளில் லைப்ஸ்டை ல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொ குத்து வழங்குபவர் மற்றும் இணை யத்தில் ஒரு பேஷன் பிளாக்கை (blog) வைத்திருப்பவர் என்பது உள் ளிட்ட வாய்ப்புகளையும் பெற லாம்.
இவைத்தவிர, பேஷன் ஷோ நிகழ்ச் சிகளிலும் உங்களின் திறமையைக் காட்டலாம். மேலும், இத்துறையில் ப்ரீலேன்சிங் முறையிலும் பணி யாற்றலாம். ஆனால், அதற்கு, துறைரீதியாக நல்ல அனுபவம் தே வை.
ப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங் கள்
* National Institute of Fashion Technology(NIFT) – New Delhi
* Indian Institute of Journalism and New Media – Bangalore
* Asian college of Journalism – Chennai
* Mudra Institute of communication – Ahmedabad
* BD Somani Institute of Art and Fahion Technology – Mumbai
* Manorama school of communication – Kottayam
* Indian Institute of mass communication – New Delhi
தகுதிகள்
பேஷன் தொடர்பான தனியாத ஆர்வமும், நல்ல எழுத்துத் திறனும் உள்ள ஒருவர், பேஷன் ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஒருவர் பேஷன் ஜர்னலிச த்தில் படிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வழக்கமான ஜர்னலிச படிப்போடு, தேவைப்படும் ஆற்றலும் இருந்தால் நீங்கள் நினைத்ததை அடை யலாம். மேலும், இதற்கென தனிப்பயிற் சியும் பெற்றால், நீங்கள் சிறப்பான ஏற் றத்தைப் பெறுவீர்கள்.
சம்பளம்
இத்துறையில், ஆரம்ப நிலையில் ஒரு வர், வருடத்திற்கு சுமார் 2 லட்சம் அல்ல து அதற்குமேல் சம்பாதிக்கலாம். இது ஒரு படைப்பாக்கத்துறை என் பதால், ஒருவரின் தனித்திறன் மற்றும் அவரின் அனுபவத்தைப் பொ றுத்து அவரின் சம்பளம் எந்த நிலைக்கு வேண்டுமானாலு ம் செல்லும். எனவே, இத்து றையைப் பொறுத்தவரை, அவரவர் திறனைப்பொறுத்து பலன் அமைகிறது.
பொதுவான ஆலோசனைகள்
இத்துறையில் வெற்றிபெற, ஒருவருக்கு, தனது எண்ணங் கள் மற்றும் விருப்பங்களை நேர்த்தி மற்றும் நயத்துடன் வெளிப்படு த்தும் திறமை இருக்க வேண்டும். மக்களின் மனநிலையை உணர்ந் து, இத்துறை தொடர்பான வாசி ப்பாளர்களின் ஆர்வத்தை தூ ண்டும் வகை யில் எழுதுவது, பேஷன் ஜர்னலிஸ்டுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய திற மையாகும்.
எதை வாங்கலாம், எது பொருத் தமாக இருக்கும் மற்றும் எது சமீப த்திய மற்றும் சிறந்த வரவு என்பதைப் பற்றி ஆலோசனை வழங்கப் படுவதை, மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
எனவே, மேற்கூறிய தேவைகளை நிறைவுசெய்ய தயாராக இருப்ப வர்கள், இந்தத் துறையில் நிச்சயம் வெற்றிக்கொடியை நாட்டுவார் கள்.
thanks to dinamalar

No comments:

Post a Comment