மாதம்,
10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி
கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும்,
சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான
என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், கிரிஸ்டல் கொலுசு செய்ய
ஆரம்பித்தேன். பெண்களிடம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல டிசைன்களில் கிரிஸ்டல் கொலுசு செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்தேன். மிக எளிமையான முறையில், கிரிஸ்டல் கொலுசு செய்யலாம்.கொலுசின் அளவிற்கு ஏற்ப, 'கியர் ஒயரை' வெட்டி, இணைப்பு கொக்கியில் கோர்த்து, கியர் லாக்கை கொண்டு, 'லாக்' செய்ய வேண்டும். பின், கலர் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப, அதற்கு தேவைப்படும் கிரிஸ்டல் மணிகளை ஒயரில் கோர்க்க
வேண்டும்.முழுவதும் கோர்த்து முடித்த பின், இணைப்பு கொக்கியையும், கியர் லாக்கையும் ஒன்றாக சேர்த்த பின், மீதி இருக்கும் ஒயரை வெட்டி விட்டால், விற்பனைக்கு தேவையான கிரிஸ்டல் கொலுசு கிடைக்கும். இதற்கான மூலப்பொருட்கள், பல பேன்சி கடைகளில் கிடைக்கின்றன.ஒரு ஜோடி கொலுசின் ஆரம்ப விலை, 150 ரூபாய். நம் கற்பனை திறனுக்கு ஏற்ப குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்று லாபமீட்டலாம்.மேலும், வளமான வாடிக்கையாளர் வட்டம் கிடைத்தால், குறைந்தபட்சம் மாதம், 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சாதாரணமாக சம்பாதிக்கலாம். முழுநேரமாக செய்யத் துவங்கினால், இன்னும் அதிக வருமானம் கிடைக்கும்.
தொடர்புக்கு: 99402 67779.

No comments:
Post a Comment