Saturday, 14 September 2013

வேலைதேடுவோருக்கு வேண்டிய தளம் (Valuable Website for Job Seekers)


எவ்வளதுதான் வருமானமிருந்தாலு ம் நம்நாட்டில் அரசு வேலைக்கு இரு க்கும் மதிப்பே தனி. படிக்கும் மாண வர்களில் பெரும்பாலோனோரின் எதிர்கால கனவு அரசு வேலைதான் .
வேலை வாய்ப்பு செய்திகளை வழங் க சில செய்தித்தாள்கள், பத்திரிகை கள் உள்ளன. இங்கே அறிமுகப்படுத் தப்படவிருக்கும் தளம் அரசு வேலைகள் தேடுபவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் .
  • S.S.L.C முதல் M.B.B.S வரை படித்துள்ள அனைவருக்கும் அவரவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு செய்திகள் இடம் பெற்று ள்ளன.
  • மாநிலங்கள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத் தப்பட்டு ள்ளன .
  • நகரங்கள் வாரியாக வேலை வாய் ப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ள ன 
  • துறைகள் வாரியாக வேலை வாய்ப்புகள் வகைப்படுத்தப்பட் டுள்ளன .
  • அனைத்து வேலைகளுக்குரிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத் தாட்கள் , தேர்வு முடிவுகளையும் அறியலாம் .
அலுவலக உதவியாளர் முதல் அறிவியல் அறிஞர்கள் வரையிலா ன அனைத்து அரசு வேலைகள் பற்றிய விபரங்கள் அறியவும்  www.jobbersjob.com இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
thanks kudalbala

நல்ல அனுபவம், அதிக வருமானம் – பேஷன் ஜர்னலிசம்


பேஷன் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி, இன்றைய நிலையில், செய்தித்தாள்கள், இதரப் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகி யவற்றில் அதிகளவில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள், முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
இந்த புதிய சூழ்நிலையானது, பேஷன் ஜர் னலிசம் என்ற ஒரு புதிய துறை உருவாக காரணமாக அமைந்துள்ளது. பேஷன் பற் றி பெரியளவில் ரிப்போர்ட் செய்வது மற்று ம் எழுதுவது பேஷன் ஜர்னலிசம் எனப்ப டும்.
பேஷன் ஜர்னலிஸ்ட் என்பவர்கள், பேஷன் துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி எழு துதல், எடிட் செய்தல் மற்றும் ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள். இத்துறையில் சிறந்து விளங்க, கவர்ச்சி மற் றும் பேஷன் தொடர்பான நல்ல அறிவைக் கொண்டிருக்க வேண் டும். மேலும், தற்போது, தேசிய மற்றும் சர்வ தேச அளவில் பெரியளவில் பேஷன் தொழில்துறை வளர்ந்துவருவதால், அதைப்பற்றிய பரந்த மற்றும் விரிவான புரிதல் அவசியமாகிறது.
பேஷன் ஜர்னலிச பணியின் தன்மைக ள்
பேஷன் நிகழ்ச்சிகள் தொடர்பான செய் திகளை சேகரித்தல், லைப் ஸ்டைல் மற்றும் பேஷன் டிரண்டுகள் தொடர்பா க எழுதுதல் ஆகியவற்றை உள்ளடக் கியது இந்தப் பணியாகும். ஒப்பனை (make-up) செய்தல், ஆடைகள் மற்றும் பலவிதமான பாவனைகள் குறித்து பேஷன் ஜர்னலிஸ்ட் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இத்துறையைப் பற்றி தெரிந்த ஒருவர், வெறும் பேஷன் ஜர்னலிஸ்ட் என்ற நிலையில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளத் தேவையில் லை. வேறுபல பணி வாய்ப்புகளும் உள்ளன. பேஷன் விமர்சகர், தொலைக்காட்சிகளில் லைப்ஸ்டை ல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொ குத்து வழங்குபவர் மற்றும் இணை யத்தில் ஒரு பேஷன் பிளாக்கை (blog) வைத்திருப்பவர் என்பது உள் ளிட்ட வாய்ப்புகளையும் பெற லாம்.
இவைத்தவிர, பேஷன் ஷோ நிகழ்ச் சிகளிலும் உங்களின் திறமையைக் காட்டலாம். மேலும், இத்துறையில் ப்ரீலேன்சிங் முறையிலும் பணி யாற்றலாம். ஆனால், அதற்கு, துறைரீதியாக நல்ல அனுபவம் தே வை.
ப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங் கள்
* National Institute of Fashion Technology(NIFT) – New Delhi
* Indian Institute of Journalism and New Media – Bangalore
* Asian college of Journalism – Chennai
* Mudra Institute of communication – Ahmedabad
* BD Somani Institute of Art and Fahion Technology – Mumbai
* Manorama school of communication – Kottayam
* Indian Institute of mass communication – New Delhi
தகுதிகள்
பேஷன் தொடர்பான தனியாத ஆர்வமும், நல்ல எழுத்துத் திறனும் உள்ள ஒருவர், பேஷன் ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஒருவர் பேஷன் ஜர்னலிச த்தில் படிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வழக்கமான ஜர்னலிச படிப்போடு, தேவைப்படும் ஆற்றலும் இருந்தால் நீங்கள் நினைத்ததை அடை யலாம். மேலும், இதற்கென தனிப்பயிற் சியும் பெற்றால், நீங்கள் சிறப்பான ஏற் றத்தைப் பெறுவீர்கள்.
சம்பளம்
இத்துறையில், ஆரம்ப நிலையில் ஒரு வர், வருடத்திற்கு சுமார் 2 லட்சம் அல்ல து அதற்குமேல் சம்பாதிக்கலாம். இது ஒரு படைப்பாக்கத்துறை என் பதால், ஒருவரின் தனித்திறன் மற்றும் அவரின் அனுபவத்தைப் பொ றுத்து அவரின் சம்பளம் எந்த நிலைக்கு வேண்டுமானாலு ம் செல்லும். எனவே, இத்து றையைப் பொறுத்தவரை, அவரவர் திறனைப்பொறுத்து பலன் அமைகிறது.
பொதுவான ஆலோசனைகள்
இத்துறையில் வெற்றிபெற, ஒருவருக்கு, தனது எண்ணங் கள் மற்றும் விருப்பங்களை நேர்த்தி மற்றும் நயத்துடன் வெளிப்படு த்தும் திறமை இருக்க வேண்டும். மக்களின் மனநிலையை உணர்ந் து, இத்துறை தொடர்பான வாசி ப்பாளர்களின் ஆர்வத்தை தூ ண்டும் வகை யில் எழுதுவது, பேஷன் ஜர்னலிஸ்டுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய திற மையாகும்.
எதை வாங்கலாம், எது பொருத் தமாக இருக்கும் மற்றும் எது சமீப த்திய மற்றும் சிறந்த வரவு என்பதைப் பற்றி ஆலோசனை வழங்கப் படுவதை, மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
எனவே, மேற்கூறிய தேவைகளை நிறைவுசெய்ய தயாராக இருப்ப வர்கள், இந்தத் துறையில் நிச்சயம் வெற்றிக்கொடியை நாட்டுவார் கள்.
thanks to dinamalar

பிஸினஸ் மேனேஜ்மென்ட் இதுதாங்க!


கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அறிவு, இன்டர்வியூவில் சரியான ப்ளஸ் தன்னம்பிக்கையான பேச்சு… வே லை கிடைப்பதற்கு இது போதும். ஆனால்… பிஸினஸுக்கு ..? பல விஷயங்களும் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் போதுதான் அது ‘க்ளிக்’ ஆகும்!
 
பல விஷயங்கள் என்ற உடன், ‘பண ம், பிஸினஸுக்கான ஐடியா மற்று ம் பணி யாளர்கள்… இவைதானே.. ?’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை!” என்கிறார் பிஸினஸ் கன்சல்டன்ட் சேகர் . ஒவ்வொன்றை யும் இங்கே விள க்கமாகவே சொல்கிறார் உங்களுக்காக…
விருப்பம்… தன்னம்பிக்கை வளர்க்கும்!
ஒரு பிஸினஸை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்களா… அல்லது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் செய்கிறீர்களா என்பது முக்கியம். பலர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் பிஸினஸ் செய்கிறார்கள். அது அவர்களுக்கேகூட தெரியாமல் இருக் கலாம். உதாரணத்துக்கு, பெற்றோரி ன் பிஸினஸை சில சமயம் எடுத்து நடத்த வேண்டி இருக்கும். இன்னும் சிலருக்கு நிலையான வருமானம் வந்து கொண்டிருக்கும். அது கொஞ்ச ம் அதிகமாக சேர்ந்துவிடும்போது… ‘பணத்தை வங்கியில் வைத்திருப்ப தை விட, ஏதாவது பிஸினஸ் செய்ய லாமே’ என்று நினைத்து, ‘பார்ட் டைம் ‘ (பகுதி நேரம்) பிஸினஸ் செய்வார் கள். இன்னும் சிலருக்கு நிறைய நேரம் இருக்கும். அதை சரியான வழியில் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ‘பார்ட் டைம்’ பிஸின ஸ் செய்ய நினைப்பார்கள்.
‘பார்ட் டைம்’ பிஸினஸில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், நீங் கள் ஏற்கெனவே செய்து கொ ண்டிருக்கும் வேலையே, உங் களுக்குச் சுமையாக மாறி வி டக்கூடிய ஆபத்து இருக்கிற து. எந்தத் தொழிலை நீங்கள் விருப்பப்பட்டு செய்கிறீர்க ளோ… அந்தத் தொழில் மட்டு மே உங்களது தன்னம்பிக்கை யை வளர்க்கும். அதுதான் உங்களையும், உங்கள் தொழி லையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லு ம்.
உதாரணத்துக்கு… உங்களுக்கு இசை தெரியும் என்பதற்காக இசைப் பள்ளி ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தொடக்கத் தில் சேர்க்கை மிக குறைவாக வே இருக்கிறது. கொஞ்சமும் மனம் தளராமல் கற்றுத் தரு வதுடன், நீங்களும் இசையை த் தொடர்ந்து கற்றுக்கொண் டே இருப்பீர்கள்… ‘இன்று இல் லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறு நாள் நம் இசைப்பள்ளி பெரிய அளவில் வளரும்’ என்ற நம்பி க்கையில்! ஒருவேளை உங்களுக்கு இசையில் விருப்பமே இல்லை என்றால்,  நாளாக ஆக உங்களது தன்னம்பிக்கை குறையும். விரை வில் உங்களது பள்ளியில் பூட்டு தான் தொங்கும்!
சந்தையின் தேவையை சிந்தியுங்கள்!
அது ஒரு பெரிய அபார்ட்மென்ட். அங்கு நிறைய இளம் பெற்றோர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு ச் செல்பவர்கள். நகரத்தில் வசி ப்பதால் குழந்தைகளைப் பார் த்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரு ‘க்ரெச்’ (Creche) ஆரம்பித் தால் என்ன என்று, அதே அபார் ட்மென்ட்டில் உள்ள ஒரு இல்ல த்தரசிக்கு ஐடியா வந்தது. அது சக்சஸும் ஆனது. மற்றவர்களு க்கு என்ன தேவை, மற்றவர்க ளால் என்ன முடியாது, அதில் நீங்கள் எவ்வளவு திறமையானவர்க ளாக இருக்கிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் இருக்கிற து… பிஸினஸ் விளையாட்டு.
வாடிக்கையாளர்கள் வாடக் கூடாது!
வாடிக்கையாளர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் போதுதான்… புதுப்புது சேவைகளைக் கொடுக்க முன்வருவீர்கள். அது உங்களது பிஸினஸுக்கு இன்னும் புது வாடிக் கையாளர்களைக் கொடுக்கும்.
இன்றுள்ள டெக்னாலஜி கம்பெனிக ளை எடுத்து கொள்ளுங்கள். எந்த கம்பெனி தொடர்ந்து மாற்றங்களை புகுத்தி வருகிறதோ… அந்த கம்பெனி தான் தொடர்ந்து சந்தையில் இருக்கி றது. இல்லாவிடில், ஒரு காலத்தில் ‘ஓஹோ’வென இருந்த கம்பெனி என் ற பெயர்தான் கிடைக்கும்.
எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்கள் சொல்வ து… ‘இஃப் யூ ஆர் நாட் அப்டேட்டட்… யு வில் பி அவுட்டேட்டட்’ (If you are not updated, you will be outdated).வேலையில் தொடர்வதற்கே அப்டேட் தேவை என்றால், பிஸினஸுக்கு அது எவ்வளவு முக்கிய ம்?!
நம்பிக்கை… நிரந்தரத் தேவை!
நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல பிஸினஸ்கள் நடந்து கொண்டிருக்கின் றன. ஆனால், அந்த நம்பிக்கையைப் பெறுவது அவ்வள வு எளிதான காரியம் அல்ல. என் நண்பர் ஒருவர், தன் தொழி லின் ஆரம்ப காலத்தில் சந்தித்த சூழ லைப் பாருங்கள். தான் உற்பத்தி செய்த பொருட்களை கடையில் கொடுத்து, பணம் பெற்றுக்கொள்வார் நண்பர். கடைக்காரர், தான் தரவேண்டிய 1,000 ரூபாயை… 10 ரூபாய் தாள்களாகக் கொ டுப்பார். நண்பர் எண்ணிப் பார்க்கும் போ து, 10 ரூபாய் அதிகமாக இருக்க… கடை க்காரரிடமே திருப்பிக் கொடுப்பார். இதே போல் பல முறை நடந்தபோதுதான், ‘ஆஹா… நாம் சோதனை செய் யப்படுகிறோம்’ என்பதே அவருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு வேளை முதல்முறையே அந்த 10 ரூபாய் தாளுக்கு அவர் ஆசைப்பட்டிருந்தா ல்..? எனவே, பண விஷயத்தில் தேவை 100% நேர்மை.
தொழில் வாக்குறுதி!
பணம் மட்டுமல்ல… தரம், நேரம் தவறாமை போன்ற விஷயத்திலும் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பல நாள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நம்பிக்கையை ஒரே நாளில் கூட இழக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், தினமும் கத்திமேல் நடப்பது போலத்தான் பிஸினஸில் இருக்க வேண்டும். 10 மணிக்கு டெலிவரி கொடுப்பதாக சொல்லிவிட்டு 9.30 மணிக்குக்கூட கொடுக்கலாம். ஆனால்… 10.10-க்குக் கொடுக்கக் கூடாது.
நீண்டகாலத் திட்டம்!
புதுப்புது ஐடியாக்கள்தான் பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து ச் செல்லும். ஆனால் அந்த ஐடியாக்களை நீண்ட காலத்துக்கு ஏற்ற வையாக, தேவைப்படும்படியா க யோசிப்பது நல்லது. காரணம் , எந்த ஒரு மாற்றத்தையும் மக் கள் உடனடியாக அங்கீகரிக்க மாட்டார்கள். ஒரு ஐடியாவை முடிந்தவரை செயல்படுத்தி வி ட்டு, அதன் பிறகும் தோற்றால் மட்டுமே… மாற்றாக மற்றொரு ஐடியாவை கொண்டு வரலாம். அப்படியில்லாமல் அடிக்கடி ஐடி யாவை மாற்றிக்கொண்டு இரு க்கும்பட்சத்தில்… உங்களது பிராண்ட், உங்களது நிறுவனத்தின் மீதான இமேஜ்… இதெல்லாம் சரிய வாய்ப்புண்டு.
பணத்தைத் தாண்டியும் பல முக்கியமான விஷயங்கள் பிஸினஸில் உள்ளது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

நிரந்தர லாபம் தரும் காளான் வளர்ப்பு – வீடியோ

http://www.youtube.com/watch?v=kNrfIqjd8hs   ----see this videos

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நாம் முன்னேற வேண்டு மானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இரு க்கிறது. அதிலும் சுயமாக முன் னேற நினைப்பவர்களுக்கு உதவுப வை சிறுதொழில்கள். அதிக முத லீடு இல்லாமல், விரைவில் தொ ழில் தொடங்க இத்தகைய சிறு தொழில்களே மிகவும் சிறந்தவை யாக இருக்கிறது. பாருங்கள்! சிறு தொழில் செய்து இப்போது நாட்டி ல் பலரும் பெரிய தொழிலதிபர்க ளாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளா ன் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர் காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிப ராக மாறிக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்ப தன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக் களானின் மருத்துவ பலன்க ளும் அதன் வளர்ப்பு முறைகளும் உங் களுக் காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். கார ணம் அசைவ சுவைக்கு நிக ரான சுவை யைத் இது தருவதால்தான். மேலு ம் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்ப ர் போன்ற தாதுச்சத்து க்களும் நிறைந்திருக்கின்ற ன.
உடலுக்குத் தேவையான சத்துக் கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கி யமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலே யே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்த து இந்த ரகங்கள் : வெள்ளைச் சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே .-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக் காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரை வேய்ந்த சாதாரண வீடே போது ம். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந் தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளா ன் வளர்க்கவும் தேவைப் படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்ப நிலை: 25-300 செல் சியசும் வெப் பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண் டும். அத்தோடு இந்த இரு அறைகளி லும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண் டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர் மா மீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shop களில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோ துமை, சோளம் ஆகியவை முக் கிய பொருள்களாக பயன்படுகி றது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்க ளை அரை வேக்காடு வேக வை த்து காற்றில் உலர்த்த வேண் டும். அதனுடன் 2% சுண்ணாம்பு ம் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில் களில் நிரப்ப வேண் டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமி களை அழிக்க குக்கரில் அடு க்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியா க வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயது டைய காளான் வித்தை காளான் தயாரிப் புக்கு பயன் படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற் கு இப்போது காளான் வித்து க்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக் கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச் சக்கை, உமி நீக்கிய மக்கா ச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீ ரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைக ளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப் பதம் இருக்கும்படி பார்த்துக் கொ ள்ள வேண்டும்.
காளான் பைகள் – படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திற ந்த பாலீத்தின் பைகளை பயன் படுத்த வேண்டும். இரு பக்க மும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதி யை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒரு புறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பை யை நன்றாக இறுக்கி கட்டி விட வேண்டும். இதற்கு ரப்பர் பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடி லினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழு வதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காண லாம். பிறகு சுத்தமான கத்தியை க் கொண்டு பாலித்தீன் பையை க் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொ ண்டு காளான்படுக்கையில் தண்  ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ் வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்ப டும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண் ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறு வடை செய்துவிட வேண்டு ம். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்கள் விருப்பம் எது வோ அப்படி அறுவடை செய்து கொள்ளல லாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போ ன்ற பொருள் கொண்டு காளான் படுகை யை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்ல து பாலிதீன் பைகளின் நான்கைந்து துளை களை கூடுதலாக இட வேண்டும். ஒவ் வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன் பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600  கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க் கும் விற்கலாம். அருகில் உள் ள ஹோட்டல்களுக்கு கொடு க்கலாம். காளானைக் கொ ண்டு பல வித உணவுப் பொரு ட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக் கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக் கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இர ண்டு நாட்கள் வரைக்கும் வை க்கலாம். இரண்டிற்கு மேற்ப ட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழி லாக இருக்கிறது. வீட்டிலிருந் தபடியே நமது வருமா னத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகி றது.
காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளி யுங் கள்..!!
தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப் பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களை யும் கற்றுக்கொள்ள முடி யும்.
காளான் வளர்த்து வெற்றி வாகை சூடிய பெண்மணியின் அனுபவ பேட்டி
இந்தக் காணொளியில் காணலாம்.
இந்த காளான் வளர்ப்பைப் பற்றி மேலும் தகவல்கள் பெற உங்களு க்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கமையங்களையோ அணுகி தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- தங்கம்பழனி

மருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி


உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த காலத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதையெல் லாம் ஒதுக்க ஆரம்பித்தபிறகுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற ஏகப்பட்ட நோய்களில் சிக்கித்தவிக் கிறோம். இன்றைய தலைமுறையினர் சிறு தானியங் களை பார்த்ததுகூட இல்லை. தற் போது நோய்களின் தாக்கத்தால் சிறு தானிய உணவுகளை மக்கள் ஏற்க முன்வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய உண வுகளை உடனடி உணவாகவும் எல்லா வயதி னர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்க ளும் உட்கொ ள்ளும் வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 வகை சிறு தானிய உணவுகளை அன்றாடம் உபயோகிக் கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வு ணவுகளின் தரம் மற்றும் சத்துக்கள் முதலிய வையும் கண்டறிய ப்பட்டது. தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவுக ளில் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் வரை புரதச் சத்தும் 5 முதல் 8 கிராம் வரை நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புக்களும் அதிகளவில் உள்ளது. சிறு தானிய உண வுகளை விரும்பி சாப்பிட மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலத்திற் கேற்ப மாற்றிக் கொடுத்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இதனால் சிறு தானியத்தின் உபயோகம் அதிகரிக்கும் போது விவசாயிகளும் அதிகம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. விவசாய பெருமக்களே உற்பத்தி செய்த சிறுதானியங்களை மாற்று பொருளாக பதப்படுத்தி விற்பனை செய் யும்போது விவசாயிகள் வருமானம் பெரு கும்.
அதேபோல் கீரைகளில் உடலுக்கு தே வையான வைட்டமின்கள், தாது உப்புக் கள் தக்க அளவில் உள்ளன. இவை உட லுக்கு மிக குறைந்த அளவே தேவைப் படுகிறது. இக்கீரை உணவை சரிவர உட் கொள்ளாவிடில் பல நோய்கள் தாக்கு வதற்கு வழி ஏற்படும். இக்கீரைக ளில் மணத்தக்காளி கீரை உடல் ஆரோக்கிய த்திற்கான சத்துக்கள் நிறைந்திருப்பதோ டு பல மருத்துவ குணங்களையும் கொ ண்டுள்ளது. சித்தா, ஆயுர்வேத மருந்துக ளில் இக்கீரை அதிகம் உபயோகிப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சி யில் வயிற்றுப்புண் (அல்சர்) குணப்படுத்தும் தன்மை உள்ளது கண்ட றியப்பட்டது. மணத்தக்காளியில் உள்ள சொலனின், ஆல்கலாய்டு, சல்போனின் போன்ற வகைகளுக்கும் புண்க ளை ஆற்றும் தன்மை உள்ளது. இக்கீரை சளி, இருமல் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தா கும். இம்மருத்துவ குணம்மிக்க கீரையை உப யோகித்து பலதானிய மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சூப் மிக்ஸ் போன்ற பல உணவுகளை தயாரி க்கலாம்.
பழங்களில் வில்வம்பழம் பண்டை காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மார்மலோசின், ஈகிலின், ஆனத்தோச யனின் போன்ற மருத் துவ தன்மை உள்ளது. இவ்வகை அனைத்து உணவுகளையும் தொழி ல் ரீதியாக பதப்படுத்துவதற்கான பயிற்சி அளி க்கப் படுகிறது. அதோடு அதற்கான இயந்திர ங்கள், பேக்கிங் முறைகள் பற்றிய விவரங்க ளும் அளிப்பதுடன் இத்தொழில் நுட்பங்களுக் கான செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் விபரங்க ளுக்கு: 
- டாக்டர் சி.பார்வதி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மனையியல் விரிவாக்கத்துறை,
மனையியல் கல்லூரி மற்றும் 
ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.
0452-242 4684, 94422 19710, 97871 50703.

மருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி


உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த காலத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதையெல் லாம் ஒதுக்க ஆரம்பித்தபிறகுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற ஏகப்பட்ட நோய்களில் சிக்கித்தவிக் கிறோம். இன்றைய தலைமுறையினர் சிறு தானியங் களை பார்த்ததுகூட இல்லை. தற் போது நோய்களின் தாக்கத்தால் சிறு தானிய உணவுகளை மக்கள் ஏற்க முன்வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய உண வுகளை உடனடி உணவாகவும் எல்லா வயதி னர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்க ளும் உட்கொ ள்ளும் வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 வகை சிறு தானிய உணவுகளை அன்றாடம் உபயோகிக் கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வு ணவுகளின் தரம் மற்றும் சத்துக்கள் முதலிய வையும் கண்டறிய ப்பட்டது. தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவுக ளில் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் வரை புரதச் சத்தும் 5 முதல் 8 கிராம் வரை நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புக்களும் அதிகளவில் உள்ளது. சிறு தானிய உண வுகளை விரும்பி சாப்பிட மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலத்திற் கேற்ப மாற்றிக் கொடுத்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இதனால் சிறு தானியத்தின் உபயோகம் அதிகரிக்கும் போது விவசாயிகளும் அதிகம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. விவசாய பெருமக்களே உற்பத்தி செய்த சிறுதானியங்களை மாற்று பொருளாக பதப்படுத்தி விற்பனை செய் யும்போது விவசாயிகள் வருமானம் பெரு கும்.
அதேபோல் கீரைகளில் உடலுக்கு தே வையான வைட்டமின்கள், தாது உப்புக் கள் தக்க அளவில் உள்ளன. இவை உட லுக்கு மிக குறைந்த அளவே தேவைப் படுகிறது. இக்கீரை உணவை சரிவர உட் கொள்ளாவிடில் பல நோய்கள் தாக்கு வதற்கு வழி ஏற்படும். இக்கீரைக ளில் மணத்தக்காளி கீரை உடல் ஆரோக்கிய த்திற்கான சத்துக்கள் நிறைந்திருப்பதோ டு பல மருத்துவ குணங்களையும் கொ ண்டுள்ளது. சித்தா, ஆயுர்வேத மருந்துக ளில் இக்கீரை அதிகம் உபயோகிப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சி யில் வயிற்றுப்புண் (அல்சர்) குணப்படுத்தும் தன்மை உள்ளது கண்ட றியப்பட்டது. மணத்தக்காளியில் உள்ள சொலனின், ஆல்கலாய்டு, சல்போனின் போன்ற வகைகளுக்கும் புண்க ளை ஆற்றும் தன்மை உள்ளது. இக்கீரை சளி, இருமல் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தா கும். இம்மருத்துவ குணம்மிக்க கீரையை உப யோகித்து பலதானிய மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சூப் மிக்ஸ் போன்ற பல உணவுகளை தயாரி க்கலாம்.
பழங்களில் வில்வம்பழம் பண்டை காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மார்மலோசின், ஈகிலின், ஆனத்தோச யனின் போன்ற மருத் துவ தன்மை உள்ளது. இவ்வகை அனைத்து உணவுகளையும் தொழி ல் ரீதியாக பதப்படுத்துவதற்கான பயிற்சி அளி க்கப் படுகிறது. அதோடு அதற்கான இயந்திர ங்கள், பேக்கிங் முறைகள் பற்றிய விவரங்க ளும் அளிப்பதுடன் இத்தொழில் நுட்பங்களுக் கான செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் விபரங்க ளுக்கு: 
- டாக்டர் சி.பார்வதி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மனையியல் விரிவாக்கத்துறை,
மனையியல் கல்லூரி மற்றும் 
ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.
0452-242 4684, 94422 19710, 97871 50703.