அதன்பொருள், நீங்களே உங்கள் முதலாளி/எஜமான் அல்லது உங்கள் சொந்த வியாபாரத்தை நீங்களே நடாத்துபவர் என்பதாகும். அவற்றில் பின்வருவன உள்ளடங்கும்:
- உங்கள்செயன்முறைகளை மேற்கொள்ளும் முறை, இடம்.நேரம் ஆகியவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்கள்.
- உங்களுக்குச் சொந்தமான கருவிகள், உபகரணங்களயே நீங்கள் பாவிக்கின்றீர்கள்.
- எல்லா நடைமுறைச்செலவுகளும் உள்வாங்கப்படுகிறது.
- (சம்பளம் எடுக்காமலேயே) சுதந்திரமாக ஆதாயத்தை ஏற்படுத்துதல் அல்லது நஷ்டத்தை அனுபவித்தல்
- சுதந்திரமான ஒப்பந்தக்காரர்களாக வேலை செய்பவர்கள் (freelancing - சுதந்திரமாக தொழில்செய்பவர் என அழைக்கப்படுவர்)
- வியாபாரச்சொந்தக்காரர்கள்
- தரகுக்கூலி அடிப்படையில் வேலைசெய்யும் விற்பனையாளர்
- விவசாயிகளும் மீனவர்களும்
சாதகங்களும் பாதகங்களும்
சாதகங்களைப் பொறுத்தவரை சுயதொழிலில் ஈடுபடுவது, சுதந்திரம், வழமையான நடைமுறைகளின் கட்டுப்பாடுகள் அற்ற மற்றும் தன்னிச்சையாக நடத்தும் சுதந்திரம், உங்கள் வியாபாரம் மிகவும் இலாபமாக அமைந்தால் பணவெகுமதிகள் கிடைக்கும் சாத்தியம்.சுயதொழிலின் பாதகங்ளைப்பொறுத்தவரை,தொழிலில் குறைந்த பாதுகாப்பு, இலவச (பல்,சுகயீன, EI )போன்ற நன்மைகள் கிடைக்காது. வரிகளை செலுத்தவேண்டியிருக்கும். அதுதொடர்பான ஆவணங்களுக்கும் நீங்களே முழுப்பொறுப்பு.
அது உங்களுக்குப்பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள்
சுயதொழில்செய்யும் உங்கள் தீர்மானம், பல வழிகளில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது. உங்கள் குணாம்சங்கள்,ஆளுமை> வாழ்க்கை முறை, என்பன சுயதொழில் செய்வது தொடர்பாக பொருத்தமாக அமைகிறதா என ஆறுதலாகச் சிந்தியுங்கள்.பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடிய அல்லது உத்தரவாதம் இல்லாத வியாபாரம் போன்ற ஆபத்தான அமைப்பிலான சுயதொழிலைத் தெரிவுசெய்யும்போது குறிப்பாக சுயமதிப்பீடு மிகவும் முக்கியமானதாகும்.
புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது மிக முக்கியமான இரு ஆக்கக் கூறுகளில் கவனம் செலுத்தவேண்டும்:
- தான்கொண்ட கருத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும். மேலும், வெற்றிக்கு மிக அவசியமான கடும் உழைப்பு, நீண்ட நேரம் வேலை செய்தல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
- விரிவான ஆராய்ச்சியும் தகவல் திரட்டலும்.
இலவசத்தொலைபேசி இலக்கம்: 1-800-361-3223 (ஒன்ராரியோவில்)
டொரன்ரோ : 416-314-8880 (TTY)டிடிவை: 416-212-1476
No comments:
Post a Comment