Saturday, 14 September 2013

நீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா?


ஆம் எனில்,பின்வரும் பொருட்களைத் தயாரிப்பதற்கும்,அதற்குத் தேவையான மூலப்பொருட்கள்,தயாரிப்புப் பயிற்சியும்,தொழில்நுட்ப விபரங்களையும் தர சென்னையைச் சேர்ந்த அஸ்ட்ரோ ட்ரேட் பிரைவேட் லிமிடெட் தரத் தயாராக இருக்கிறது.
இந்த நிறுவனம் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் காளிகாம்பாள் கோவில் அருகில் எண்:232 இல் செயல்பட்டுவருகிறது.தொலைபேசி:044 – 43412222 செல் எண்கள்: 98845 13369,96770 56804.
சலவை சோப், ஷாம்பு,தரையை சுத்தப்படுத்தும் க்ளீனிங் திரவங்கள்,பற்பசை,தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,முகப்பூச்சு க்ரீம்,குங்குமம்,ஊதுபத்தி,சூடக்கட்டி,ப்ளீச்சிங் பவுடர்,அழுக்கு நீக்கியான ஹைட்ரோகுளோரிக் ஆசிட்,சலவைப் பவுடர்,கழிப்பிடத்தை சுத்தப்படுத்தும் சாதனங்கள்,பல் தேய்க்கும் ப்ரஷ்,குளியல் சோப்,முகப்பூச்சு பவுடர்,பாத்திரம் துலக்கும் பவுடர்,சோப்பு,கம்யூட்டர் சாம்பிராணி, தரை துடைப்பான்,பினாயில்,சானிடரி நாப்கின்.
================================================================
2..மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண “அக்மாரக் கிரேடிங்” கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 – 2626 3484; 044 – 4217 0506
=======================================================================================
3.புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம் மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது. இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும் முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது கலைஞர்களுக்கு “கூலி இழப்பு” தொகையாக மாதம் ரூ2000/= அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும் பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.
தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528
4.காளான் வளர்ப்பு ,வீட்டு தோட்டம் ,மாடி தோட்டம் ,மண் புழு வளர்ப்பு ,மண் புழு உரம் ,மற்றும் பல சிறு தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளன
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 – 2626 3484; 044 – 4217 0506
5.இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கி நூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 – 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை
வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம். தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
1.திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
2.திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745
==============================
3.திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
4.திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : —
அலைபேசி எண் : 94441 89677
===========================
5.திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363
sorce: www.eankankal.blogspot.com

3 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள். இதே போல் மருத்துவ தாவரங்களையும் பயிரிட்டு நல்ல லாபம் சம்பாதிக்கலாம். டெங்குவிற்கு கொடுக்கப்படும் நிலவேம்புகஷாயம், நிலவேம்பு மற்றும் பல்வேறு மருத்துவ மூலிகைகளால் தயாரிக்கப்படுகின்றன. இது போன்று பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் மருத்துவ தாவரங்கள் அடிப்படையில் உள்ள சித்தா மற்றும் ஆயூர்வேத மருத்துவமுறைகளை நாட தொடங்கியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு http://ctmr.org.in/Publications.html
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  2. பூச்சூடம் தயாரிப்பது எப்படி

    ReplyDelete
  3. Saving lives strengthening communities!
    We are currently looking for kidney donors in "LS Healthcare Center" to help patients who face life time dialysis problem unless they under go Kidney Transplant. Here we offer financial rewards to interested donors. Contact us via Email: kidneylivertc@gmail.com

    ReplyDelete