கருவிகள் எத்தனை எத்தனை என அணிவகுத்து சந்தைக்கு வந்தாலும் பாரம்பரியமாக
பயன்படுத்தப்பட்டு வரும் எளிய கருவிகளுக்கு அவை ஈடு இல்லை, என்பது தான்
உண்மை. அதிலும், நெல் சாகுபடிக்கென்றே பற்பல கருவிகளை முன்னோர்கள்
பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றளவும் கூட பல பாகங்களிலும் விரல்விட்டு
எண்ணக்கூடிய அளவிலான விவசாயிகள் பயன்படுத்தியும் வருகிறார்கள்.
நாகர்கோவில்-பூதப்பாண்டி சாலையில் பன்னிரண்டாவது கிலோ மீட்டரில்
இருக்கிறது. இந்தப் பகுதி முழுவதும் நெல்தான் பிரதானப் பயிர் நவீன இயந்திர
சாகுபடிக்கு மத்தியில் பூட்டி உழவு அடிப்பது, அறுவடை இயந்திரங்களுக்கு விடை
கொடுப்பது, பாரம்பரியக் கருவி பயன்படுத்துவது என அதிசயிக்க வைக்கிறார்கள்.
விதை சேமிக்க குலுக்கை
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினராக பதவி வகிக்கும், இப்பகுதியின் முன்னோடி விவசாயி செண்பக சேகரன் பிள்ளை, அந்தப் பாரம்பரிய பெருமையை நம்மிடம் பேசும்போது பலவிதமான கருவிகளையும், அவற்றின் செயல்பாட்டையும் எடுத்து வைத்தார் அழகாக. “அந்தக் காலத்தில் நெல் விதையை விவசாயிகள் வெளியில் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க அவங்கவங்களுக்குத் தேவையான விதையை, அவங்களே உற்பத்தி பண்ணி எடுத்து வைத்துக்கொள்வார்கள். ஒரு கோட்டை (87 கிலோ) அளவுக்கு விதைநெல்லை, சாணம் போட்டு மொழுகின மண் தரையில் பரப்பி மூணு நாள் வெயில்ல காய வைப்போம். பிறகு, நிழலில் உலர்துவோம். அதற்கு பிறகு, குலுக்கையில் நெல்லைப்போட்டு .. ஆட்டுக்கழிவு, புங்கன் இலை, வேப்பிலை, நொச்சி இலை எல்லாத்தையும் போட்டு மூடி வைத்துவிட்டால் . எந்தப் பிரச்சனையும் இல்லாம விதை பாதுகாப்பா இருக்கும்.
குலுக்கையோட கீழ்ப்பகுதியில் ஒரு கை நுழையுற அளவுக்கு சின்னதா துவாரம் இருக்கும். அதுல, கொட்டாங்குச்சியை வைத்து அடைத்து, சாணம் போட்டு பூசிவிடுவோம். கொட்டாங்குச்சியில் ஒரு கயிறு இருக்கும். தேவைப்படும்போது கயிற்றை இழுத்தா விதைநெல்கொட்டும். மின்சார கவலை தீர்க்கும் இறவட்டி குளங்களில் இருந்துதான் வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வரும் குளத்தில் உள்ள தண்ணீர், மடை மட்டத்தைவிட குறைந்தால் வாய்க்காலுக்குத் தண்ணிர் வராது. அந்த மாதிரி சமயங்களில் இறவட்டிங்கற கருவியைப் பயன்படுத்தி ஏற்றிவிடுவோம்.
அப்படி செய்கிறபொழுது நல்ல உடற்பயிற்சியாவும்உற்சாகம் தரும் ஊடு மண்வெட்டி கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை பங்குனி, சித்திரை மாதங்களில் கனமழை இருக்கும் அப்பொழுது ஐந்து முறை புழுதி உழவு ஒட்டி நேரடியாகவே நெல்லை விதைச்சுடுவோம். இப்படி கையால தூவி விடுகிறபொழுது சில இடங்களில் நெருக்கமாகவும், சில இடங்களில் பரவலாகவும் விழுந்துவிடும். அதனால் பயிரும் அப்படியே வளர ஆரம்பிச்சுடும். இப்படி நெருக்கமாக இருக்கிற பயிரைக் களைச்சு வேற இடத்துல நட வேண்டி இருக்கும். இதுக்கா ஊடு மண்வெட்டி என்கிற கருவியைப் பயன்படுத்துவோம். நீளமான கம்போட சிறியதாக இருக்கும். இதை வைத்து எடுக்கும்பொழுது வேர் அறுபடாமல் எடுத்துவிடலாம். ஏற்கெனவே பயிர் இருந்த மண்ணோட எடுத்தும் நட்டுவிடலாம்.
களைவிடுதல்
நாற்றங்கால் தயாரிப்புக்கு ஏழு அடி நீளம் உள்ள உருண்டை மூங்கில் கம்பை, களை விடும் கருவியாக பயன்படுத்துவோம். விதை தூவிய பிறகு, இந்தக் கம்பை வைத்து வயலில் உருட்டி விடுவோம். இதனால நாற்றங்கால் சமதளமா மாறிடும். நெல்லும் பழுது இல்லாம முளைத்து வரும். களையும் தலைதூக்காது, ஒரு ஏக்கர்ல விதைக்க எட்டு சென்ட் அளவுக்கு நாற்றங்கால் போடுவோம்.
பொழித்தட்டுப்பலகை
நிலத்தைச் சமப்படுத்த பொழித்தட்டு’னு ஒரு தட்டையான பலகையைப் பயன்படுத்துவோம். இதை நிலத்துல போட்டு தேய்த்து சமப்படுத்துவோம்.
இதெல்லாம் சின்னச் சின்ன வேளாண்மைக் கருவிகள்தான்னாலும், தமிழர்களோட வரலாற்றைச் சொல்கிற பாரம்பரியமான கருவிகள். இப்பொழுது இருக்கிற இளம் தலைமுறை விவசாயிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குது. அவர்கள் இதைப்பயன்படுத்தலனா கூட, இதோட அருமை, பெருமைகளை தெரிஞ்சுக்கவாவது செய்யணும். அது எதிர்காலத்தில் நிச்சயமா பலன் தரக்கூடியதா இருக்கும்.
தொடர்புக்கு
செண்பகசேகரன் பிள்ளை
அலைபேசி: 98947-62064

No comments:
Post a Comment