வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாக இருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில் அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா? தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின் என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையை செல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இது குளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும். ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம் அதனுடைய கூண்டை அமைக்க ஒரு சிறிய இடம் மட்டுமே. மேலும் பல பேர் பறவையை ஒரு செல்லப்பிராணியாகவே பார்ப்பதில்லை. அதனால் அதனை உங்கள் வீட்டில் வளர்க்க நீங்கள் தனியாக அதற்கென்று கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.
1. குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும் : பொதுவாக செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் பறவைகளின் மீது நல்ல மதிப்பு கிடையாது. அதிலும் சில நாய் அல்லது பூனை விரும்பிகளை பொறுத்தவரை பறவைகள் என்பது அசிங்கமான, விரும்பத்தகாத ஒரு இனமாகும்; அது வீட்டில் இருப்பதை விட வெளியிலேயே இருப்பது நல்லது என்று எண்ணுவர். ஆனால் நாய் அல்லது பூனை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பறவைகள் தான் சரியான செல்லப்பிராணி.
2. மலிவாக கிடைக்கும் உணவுகள்: நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவின் செலவு ஆதிகம். ஆனால் பறவைகளுக்கு மிகவும் குறைவே. அவைகள் உயிர் வாழ தேவையானதெல்லாம் தினசரி சிறு அளவு உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே. பறவைகளுக்கென்று நல்ல தரமான மாத்திரை வடிவிலான உணவு கொடுக்கப்பட வேண்டும். வேண்டுமெனில் அதனுடன் சேர்த்து சிறு பழங்களையும், காய்கறிகளையும் அதற்கு தீனியாக போடலாம்.
3 அறிவாளிகள்: ஒருவரை "பறவையின் புத்தி" என்று புகழ்வது, அவரை அவமரியாதை செய்வதைப் போல் இருக்கலாம். ஆனால் உண்மையில் விலங்கு இனத்திலேயே புத்திக்கூர்மை அதிகமாக இருப்பது பறவைகளுக்குத் தான். யோசித்து பாருங்களேன், மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் பறவைகள் தான் நாம் செய்வதையும், பேசுவதையும் திரும்பச் செய்ய முயற்சி செய்யும்.
4. குறைந்த பராமரிப்புச் செலவு: நாய்கள் மற்றும் பூனைகளைப் போல பறவைகளுக்கு அதிக கவனம் செலுத்த தேவையில்லை. அதற்கு நடை பயிற்சியையோ, வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையோ அல்லது அவைகளை சந்தோஷப்படுத்தும் கேளிக்கைகளைளோ செய்யத் தேவையில்லை. மேலும் நாய்களின் கழிவை சுத்தம் செய்வதை காட்டிலும், பறவைகளின் கூண்டை சுத்தப்படுத்துவது எளிது
5. சிறிய இடத்திற்கு சரியான தேர்வு: ஒரு சின்ன அபார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் வளர்ப்பதற்கு நாயும், பூனையும் சரியாக இருக்காது. ஏனெனில் அவைகள் ஓடவும், விளையாடவும் வீட்டில் போதிய இடம் இருக்காது. அதுவே பறவை என்றால், அதனை வளர்க்க ஒரு சிறிய கூண்டு மட்டும் போதுமானது.
6. மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை: மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை பறவைகள். நாய்கள் மற்றும் பூனைகளை காட்டிலும் பறவைகள், அதனை வளர்ப்பவரிடம் அதிகமாக ஒன்றிவிடும். மேலும் அன்றைய நாளை பற்றிய குறைகளை நீங்கள் கூறும் போது, அதை கேட்பதற்கு நிச்சயம் உங்கள் பறவை செவி சாய்க்கும். கேட்பது மட்டுமல்லாது, உங்களுக்கு ஆறுதலாக கீச்சிடவும் செய்யும். www.indian-farms.com
அருமை
ReplyDeletePlease send your whats app number
ReplyDeleteMy no9789130160
பறவை செல்லப்பிராணி
ReplyDeleteஅருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=1QCwXV4h-yg
Saving lives strengthening communities!
ReplyDeleteWe are currently looking for kidney donors in "LS Healthcare Center" to help patients who face life time dialysis problem unless they under go Kidney Transplant. Here we offer financial rewards to interested donors. Contact us via Email: kidneylivertc@gmail.com